வெறும் வயிற்றில் சியா சீட்ஸ் தண்ணீரா?
ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க நம் உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உள்ளிட்ட மூன்று வேளைகளை பெரும்பாலும் சாப்பிடுகிறோம்.
காலை உணவும் மதிய உணவும் நமது உணவின் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது.
அதனால்தான் ஒரு நபர் அவரது நாளை தொடங்கும் முன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
காலை நேரத்தில் உண்ணப்படும் முதல் உணவில் உடலுக்கு ஆற்றலை அளிக்க உதவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான விஷயங்கள் இருக்க வேண்டும்.
ஆரோக்கிய நன்மைகள்
சியா விதை தண்ணீரைக் குடிப்பது நாளைத் தொடங்க ஆரோக்கியமான வழியாகக் கருதப்படுகிறது மற்றும் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சியா விதைகளில் காணப்படுகின்றன.
இது எடை இழப்புக்கும் உதவுகிறது. சியா விதை தண்ணீரை உங்கள் காலைப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுருப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
எனவே சியா விதை தண்ணீரை காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எடை இழப்புக்கு உதவும்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் எடை இழப்புக்காகவும் சியா விதைகள் உட்கொள்ளப்படுகின்றன.
சியா விதைகளில் 39% நார்ச்சத்து உள்ளது. விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சி வயிற்றில் விரிவடைந்து பசியை குறைக்க உதவுகிறது.
எனவே இது எது எடையைக் குறைக்க உதவும்.
செரிமானம்
சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது மற்றும் பசியை குறைக்க உதவுகிறது.
அதிக நார்ச்சத்து அதிகரித்த வளர்சிதை மாற்றம் மற்றும் சிறந்த இதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் நுகர்வு வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
இது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான இதயம்
சியா விதைகளில் குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது இதய நோய் உட்பட பல தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
அதேபோல் சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
காலையில் சியா விதை தண்ணீரை தவறாமல் உட்கொண்டால் அது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும்.
சியா விதைகளை அப்டியே சாப்பிடுவதன் மூலமோ அல்லது அதன் விதை தண்ணீரை உட்கொள்வதன் மூலமோ உடலில் ஏற்படும் வீக்கத்தை பெருமளவு குறைக்கலாம்.
ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது
சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் செல் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இது இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கவும் உதவுகிறது.