புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; நகைபிரியர்கள் ஷாக்!
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் நினைத்துப்பார்க்காத வகையில் எகிறி வருகின்றமை சாமன்ய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (15) பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு லட்சத்தை கடந்து விற்பனை
கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது.
ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89,440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி விற்பனை ஆனது.

இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.
கடந்த 12-ந்தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நகைபிரியர்கள் ஷாக்
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (15) காலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

1 லட்சத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவுசெய்துள்ளது. அதாவது, இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று (15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளை தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.