நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்த தங்கம் விலை
சென்னையில் இதுவரை இல்லாதளவு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,015 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி சென்னையில் நேற்று கிராம் 5,930 ரூபாயாக இருந்த 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,015ஆக உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை 47,440 ஆக இருந்த நிலையில் ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை இதற்கு முன்பு 2023 டிசம்பர் 4 ஆம் திகதி ஒரு கிராம் 5,975ரூபாய் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்ச விலையாக இருந்தது.
இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிராம் ரூ.6,015 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு 1.20ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.