தமிழர்பகுதியில் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் குழப்பம் ; ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
அம்பாறை - அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் குறைபாடுகள் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் நலன் விரும்பிகள் குறிப்பிட்டனர்.
மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் மூன்று பேர், கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிர்வாக முறைகேடு காரணமாகவே சுகாதார ஊழியர்களுக்குள் இவ்வாறு மோதல் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மோதலின் போது ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை குறித்த ஊழியர்களே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் நிருவாக செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் ஒரு சிலரால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், பொய்யான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுவதாக அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் கூறியுள்ளார்.
[NYLQY1F ]