யாழில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை முதல் குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் காலை முதல் டோக்கன் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று மாலை திடீரென எரிபொருள் முடிவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஓர் குழப்பமான நிலை உருவாகியது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலைய வாயில்கள் அடைக்கப்பட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் யாழ்-கண்டி பிரதான வீதியை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
ஒரு லீற்றர் பெற்றோல் என்றாலும் தாருங்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மட்டும் குடிமக்கள் இல்லை சாதாரண மக்களுக்கும் எரிபொருளை வழங்குமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.