மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65% வளர்ச்சியாகும். மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 129,466 வருகையுடன் ஒப்பிடுகையில் இது 12.6% வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி
புதிய புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 60,342 ஆகும்.
இது ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 41% ஆகும்.
அத்துடன், பின்வரும் நாடுகளிலிருந்தும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்கிடையில், 2026 ஜனவரி 01 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,022,022 ஆக உயர்ந்துள்ளது.
இக்காலப்பகுதியில் அதிகப்படியாக இந்தியாவிலிருந்து 250,260 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 98,093 பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,073 பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.