அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 65சதம், விற்பனைப் பெறுமதி 339 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 450 ரூபா 72 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 29 சதம், விற்பனைப் பெறுமதி 389ரூபாய் 23சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 422ரூபாய் 63 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231ரூபா 59 சதம், விற்பனைப் பெறுமதி 240 ரூபாய் 67 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 63 சதம், விற்பனைப் பெறுமதி 239 ரூபாய் 19என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 3 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03சதம், விற்பனைப் பெறுமதி 2. ரூபாய் 11சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.