இலங்கையில் இன்று மரக்கறி விலைகளில் மாற்றம்!
நாட்டின் மரக்கறி விலைகளில் இன்று (27) திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
எகிறும் இஞ்சி விலை
அதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ,ஒரு கிலோ இஞ்சி 4,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 1,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ போஞ்சி 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 360 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 400 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 280 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெண்டைக்காய் 140 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெங்காயத் தாள் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
பேலியகொடை மரக்கறி சந்தை
இதேவேளை, பேலியகொடை மரக்கறி சந்தைகளில் ஒரு கிலோ இஞ்சி 3,800 முதல் 4,000 ரூபா வரையும் , ஒரு கிலோ தேசிக்காய் 1400 ரூபாவாகவும் , ஒரு கிலோ போஞ்சி 400 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 60 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெங்காயத் தாள் 350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.