இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (2026.02.26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0869 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.5941 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 426 ரூபா 01 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 5 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 408 ரூபாய் 89 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 21 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 3 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 72 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 35 சதம், விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 7 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 01 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.