இலங்கை டொலர் பெறுமதியில் இன்று மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 295 ரூபாய் 50 சதம் ஆகும் .
அதேபோல ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 376 ரூபா 93 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 312 ரூபாய் 1 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 79 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 10 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 72 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 188 ரூபாய் 99 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 63 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 48 சதம்.
மேலும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 93 சதம் ஆகவும் உள்ளது.