முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் இது கட்டணத்தை குறைப்பதுக்கு போதாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை அதன் தலைவரான லலித் தர்மசேன இன்று (01) காலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணம்
டீசல் விலை 15 ரூபாவால் குறிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொது போக்குவரத்து சேவையை தரமான சேவையாக நடத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைகளையும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பேருந்து கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.