இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதிவால் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!
பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக திட்மிடப்பட்ட சத்திரசிகிச்சைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்து பற்ற்றாக்குகுறையால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுமாறு இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேவை கேட்டிருந்தார்.
டுவிட்டர் பதிவொன்றில் இது குறித்து அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கவலை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து , தேவையான மருந்துகள் விநியோகிக்கப்படும் என மருத்துவ விநியோகப் பிரிவு உறுதியளித்தையடுத்து மீண்டும் சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன சற்றுமுன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மருந்துக்கு தட்டுப்பாடு; போதனா வைத்தியசாலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கை வைத்தியசாலை அறிவிப்பால் மனம் கலங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!