இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
பஸ் கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 19 ரூபாய் அல்லது 20 ரூபாவினால் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் யோசனை இன்று அமைச்சரவைக்கு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பிலான முழுமையான விபரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்கு அறிவித்துள்ளது.
எரிபொருள் விளையேற்றத்திற்கமைய பயணிகள்புகையிரத போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை புகையிரத திணைக்களம் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து அமைச்சின் செயலாளரிற்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய தற்போது நடைமுறையில் உள்ள 17 ரூபாய் குறைந்தப்பட்ச கட்டணத்தை 19 அல்லது 20 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து புகையிரத கட்டணத்தையும் அதிகரிக்குமாறு இலங்கை புகையிரத திணைக்களம் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.
புகையிரத சேவை கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது.