சந்திராயன் –3; சர்சையை ஏற்படுத்திய நடிகரின் பதிவு!
இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய சந்திராயன் –3 விண்கலம் சந்திரனில் நாளை (23) தரையிறங்கவுள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சந்திராயன் விண்கலம் சந்திரனில் எடுத்த முதல் படம் என தேநீர் ஆற்றும் ஒரு படத்தை தனது ட்வீற்றர் பக்கத்தில் போட்டு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்தின் உருவமே அது என்றாலும், அவர் தேநீர் ஆற்றும் படமானது இந்திய பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஒரு விடயம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் கெளரவத்துக்கே பங்கம்
இந்திய பிரதமர் மோடி தனது சிறுவயதில் தேநீர் தயாரிக்கும் பணியில் இருந்தவர் என்பதை உலகமே அறியும். இருப்பினும் இந்திய அறிவியல் மற்றும் இந்தியாவின் கெளரவத்துக்கே நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கம் விளைவித்து விட்டார் என்றும் இது முற்று முழுதான ஒரு தேசத்துரோகம் எறும் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ,ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பிறகு விண்வெளிக்கு ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பும் ஒரு நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் இந்த முயற்சியானது சர்வதேச அளவில் ஒரு கெளரவமாகும். அதை நடிகர் பிரகாஷ்ராஜ் கொச்சைப் படுத்தி விட்டார் என சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தேசத்துரோகி என்றே பலரும் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
கூலாக பதில் கொடுத்த பிரகாஷ்ராஜ்
அவர் இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. எனினுமிதற்கு கூலாக பதில் கொடுத்துள்ள பிரகாஷ்ராஜ் ,
"இது ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவை. கேரள சாய்வாலாவை (கேரளாவில் தேநீர் தயாரித்து விற்கும் பணியை செய்பவர்கள்) கொண்டாட இந்த பதிவை போட்டேன். உங்களுக்கு எந்த சாய்வாலா தெரிந்தார்? உங்களுக்கு நகைச்சுவை புரியவில்லை என்றால், அந்த நகைச்சுவை உங்களை பற்றியதா வளருங்கள் " என பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
வெறுப்பாக பார்த்தால் அனைத்தும் வெறுப்பாகவே பார்க்கப்படும் என்றும், நான் இந்த நகைச்சுவையினை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறேன் , நான் கேரளாவின் தேநீர் கடைக்காரர்களை கொண்டாடினேன்.
BREAKING NEWS:-
— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G
இந்த கேரளா தேநீர் கடைக்காரர்கள் குறித்த நகைச்சுவையினை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால், அதுதான் நகைச்சுவை எனவும் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் இந்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சி மாத்திரமல்லாது விண்வெளிக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக அனுப்புவதில் ஒத்துழைப்பு நல்கிய அனைவரையும் அதே வேளை இந்த திட்டத்தால் பெருமைப்படும் அனைத்து இந்தியர்களையும் பிரகாஷ்ராஜ் அவமானப்படுத்தி விட்டார் என்றே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.