நிராகரிக்கப்பட்ட சாமர சம்பத்தின் மெத்தை கோரிக்கை!
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை மருத்துவர்கள் நிராகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளன.
நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக் முதுகுவலி இருப்பதாகக் கூறி சிறை அதிகாரிகளிடம் மெத்தை கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மருத்துவரிடம் கோரிக்கை
சிறை மருத்துவரிடம் கோரிக்கையை பரிந்துரைத்த பிறகுஇ அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைத் துறையின் அறிவிப்பின்படி, இதுபோன்ற உபகரணங்களை வழங்குவதற்கு மருத்துவ பரிந்துரை கட்டாயமாகும்.
மேலும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் மெத்தை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
சிறை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத்தின் உடலின் தன்மை காரணமாக, தரையில் தூங்குவது அவருக்கு கடினமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |