இலங்கை மின்சார சபையின் இலாபம் வீழ்ச்சி
இலங்கை மின்சார சபையின் நிகர இலாபம் கடந்த 2024 டிசம்பர் 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் 99% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதானமாக மின்சார சபையின் வருமானம் குறைதல் மற்றும் விற்பனை செலவு உயர்வே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் மின்சார சபையின் வருமானம் 111.80 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
நிகர இலாபத்துடன் ஒப்பிடும் போது, 99% சதவீத குறைவு
அதோடு, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 156.25 பில்லியனில் இருந்து 28% குறைவாகும். இதற்கிடையில், மின்சார சபையின் விற்பனை செலவுகள் 78.03 பில்லியனாக இருந்து, இந்த காலாண்டில் இது 49% வீத அதிகரிப்புடன் 116.29 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதன் பின்னணியில் கடந்த 2023 டிசம்பர் காலாண்டில் 78.22 பில்லியன் ரூபாவாக பதிவான மின்சார சபையின் மொத்த இலாபம், கடந்த காலாண்டில் 4.49 பில்லியன் வரையில் 106% வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக மின்சார சபையானது 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 3.04 பில்லியன் இயக்க இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. 2023 டிசம்பர் காலாண்டில், 91.97 பில்லியன் செயல்பாட்டு இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இருப்பினும், 2024 டிசம்பர் காலாண்டின் நிதி வருமானம் மற்றும் செலவுகளை சரிசெய்த பிறகு, மின்சார சபையின் நிகர இலாபம் 603 மில்லியனாக ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டின் நிகர இலாபத்துடன் ஒப்பிடும் போது, 99% சதவீத குறைவு எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.