இலங்கையில் வெள்ளத்தில் பல பிரதேசங்கள்; இடிந்து விழுந்த நூற்றாண்டு பழைமையான பாலம்
சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவாக, இந்த பழமையான பாலத்தின் பகுதி சரிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் முக்கிய வரலாற்று பொக்கிஷம்
சுமார் 123 ஆண்டுகளாக பெந்தோட்டை பகுதியை இணைத்து வந்த இந்த பாலம், இலங்கையின் முக்கிய வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
காலநிலை மேலும் மோசமடையக் கூடும் என்பதால்,குறித்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், போக்குவரத்து மாற்று பாதைகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் மதிப்பீடுகள் தற்போது நடைபெற்று வருகின்றதாவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

