இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி அறிவிப்பு!
இந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபா மேலதிகமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருக்கும் வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும் நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சலுகை நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.