பல மடங்கு உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் சசெலரி ஜூஸ் குடித்துள்ளீர்களா?
சமீப காலமாக செலரி ஜூஸ் மக்களிடம் அதிகம் பிரபலமாகி வருகிறது. இந்த ஜூஸில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளும் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் உள்ளன.
இந்த ஜுஸை குடிப்பதால் தங்கள் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கின்றது. ஆகவே நாம் செலரி ஜுஸில் உள்ள நன்மைகள் குறித்து இப்போது நாம் பார்ப்போம்.
நீர்ச்சத்து
செலரில் ஜூஸில் பெரும் பங்கு நீர் இருப்பதால், நம் உடலுக்கு நீர்ச்சத்தை தரும் சிறந்த பானமாக இது கருதப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீர்சத்து குறையாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் உடலின் வெப்பநிலை, ரத்த அழுத்தம், மூளையின் செயல்பாடு, கழிவு நீக்கம், சிறுநீரக ஆரோக்கியம் ஆகியவை முறையாக ஒழுங்குபடுத்தப்படும். ஆகவே இனி சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு பதிலாக சத்து நிறைந்த செலரி ஜூஸை பருகுங்கள்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
மற்ற பழ ஜுஸ்களோடு ஒப்பிடும் போது செலரி ஜுஸில் கலோரிகளும் சர்க்கரையும் குறைவாகவே உள்ளது. இதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புகிறவர்களும் உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்களும் தாராளமக செலரி ஜூஸை பருகலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
செலரி ஜுஸில் அபிஜெனின் மற்றும் லூடெலின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த கலவைகள் நம்முடைய உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து கீல்வாதம், ஆஸ்துமா நரம்புதளர்ச்சி போன்ற நாள்பட நோய்களிலிருந்து காக்கிறது.
கீல்வாதத்தை சரிசெய்ய உதவும்
செலரி ஜூஸில் உள்ள அபிஜெனின் என்ற கலவை கீல்வாதத்தை குணப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. செலரி ஜுஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம் உள்ள நபர்களுக்கு பயனளிப்பதாக உள்ளது.
நரம்புசம்பதமான நோய்கள்
செலரி ஜூஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அல்சைமைர் போன்ற நரம்பு சம்மந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. செலரி ஜூஸை டயட்டில் சேர்த்துக்கொள்வதால், அதிலுள்ள அபிஜெனின் மற்றும் லூடெலின் என்ற கலவைகள் மூளையை பாதுகாத்து இதுபோன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன.
குடல் ஆரோக்கியம்
செரிமான ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது செலரி ஜுஸ். மேலும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் ஆரம்பகட்ட ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு காரணம் இதிலுள்ள அபிஜெனின் மற்றும் லூடெலின் என்ற கலவைகள். மேலும் செலரி ஜூஸில் அதிகப்படியான நார்சத்து உள்ளதால், குடல் நுண்ணுயிர்களை பராமரிக்க உதவி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்
செலரி ஜுஸ் சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் நம்முடைய இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் பானமாகும். உய்ர ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த செலரி ஜூஸ் உதவியாக இருக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
செலரி ஜுஸில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டில் புற்றுநோய் எதிர்ப்பு காரணிகள் உள்ளது. இவை நம் உடலில் வளர் வாய்ப்புள்ள புற்றுநோய் செல்களை தடுத்து வேறு பகுதிகளுக்கு பரவாமல் பார்த்துக்கொள்கிறது.