யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
புலம் பெயர் குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளுடன் வந்து தங்கியிருந்துள்ளார்.

அத்து மீறியதாக தாக்குதல்
யாழில் உள்ள பிரபலமான மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது. விழாவுக்காக வீட்டுக்கு வந்திருந்த அயல் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை மண்டபத்திற்கு தோழிகளில் ஒருவராக தன்னுடன் காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி குடும்பஸ்தர் நிறுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் குத்து விளக்கு துாக்குவதற்காக குறித்த சிறுமியை காணாது மண்டபத்தில் தேடிய சிறுமியின் நெருங்கிய உறவினர் சிறுமியைத் தேடி வீட்டுக்குச் சென்ற போது சிறுமியுடன் குடும்பஸ்தர் அறை ஒன்றுக்குள் இருப்பதை அவதானித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்ற அயலவர்கள் குடும்பஸ்தரை நையப்புடைத்ததுள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் உறவினர்கள் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.