யாழ் கசூரினாவில் விசப்பாசியின் தாக்கம்; ஆறுபேர் மருத்துவமனையில்!
யாழ்ப்பாணம் காரைநகர் – காசூரினா கடலில் நீராடிய அறுவர் நேற்றையதினம் (26) விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.
கசூரினா சுற்றுலா மையமானது தினமும் பலரும் வந்துபோகும் இடமாக காணப்படுகின்றது.
காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை
யாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகள் காசூரினா கடற்கரைக்கு செல்லாமல் திரும்புவதில்லை எனலாம். இந்நிலையில் காசூரினா கடலில் நீராடிய அறுவர் விசப்பாசி தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கூறுகையில், விஷப்பாசி தாக்கி ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு இது குறித்து தெரியப்படுத்தியதாக கூறினார் .
அதோடு கடந்த நாட்களில் இவ்வாறான தாக்கம் எவையும் இடம்பெறவில்லை என கூறிய அவர், திடீரென விஷப்பாசி தாக்கம் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.