ஏரிஎம் இயந்திரங்களில் பண மோசடி
வங்கிகளில் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த நபர்களை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பம்பலப்பிட்டி தொம்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் போலியான வங்கி அட்டைகளைத் தயாரித்து அவற்றுடன் வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு அருகில் காணப்படுவதுடன் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க எவராது வரும்போது, அந்த இயந்திரத்திலிருந்து பணம் எடுப்பதனை முன்கூட்டியே சில கருவிகளைப் பயன்படுத்தி தடுப்பதாகவும் இதன்போது பணத்தை மீளப்பெற அங்கு வருவோர் தமக்கான பணத்தை எடுக்க முடியாத நிலையின்போது சந்தேக நபர் தானாகவே முன்வந்து பணத்தை பெற உதவுவதுபோல் நடிப்பதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் சந்தேக நபர் வேறு ஏரிஎம் இயந்திரங்கள் மூலம் உண்மையான அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை மீளப் பெற்று மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.