நிறைவுக்கு வந்தது பூஜித, ஹேமசிறி வழக்கு
நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பூஜித, ஹேமசிறி வழக்குகள் நிறைவுக்கு வந்துள்ளது.
தாக்குதல் குறித்து , தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பதில் நீதவான் சஞ்சய கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதவான் பூஜித, ஹேமசிறி எதிரான குறித்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.