பெண்களின் இந்த பிரச்சனைகளுக்கு கைகொடுக்கும் கேரட்!
ஆரோக்கியத்திற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும், சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம். ற சில காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை.
மாங்காய், தேங்காய் என நீளும் அந்தப் பட்டியலில் கேரட்டுக்கும் முக்கிய இடம் உள்ளது.
ஆனால், இந்த கேரட்டின் பல நன்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், பெண்களின் பல உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்கும் தனிப்பண்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சரியான உணவைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
சரியான உணவு என்றால் அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் முக்கியமான தேர்வு ஆகும்.
குளிர்கால காய்கறிகள்
காய்கறிகள் பல்வேறு வண்ணங்களில் இருந்தாலும், குளிர்காலத்தில் விளையும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றவை .
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கேரட், பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இருந்தாலும், கேரட்டில் உள்ள பல பண்புகள், பெண்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
ஹார்மோன் சமநிலையை பாதுகாக்கும்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சமநிலையில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு அதிக தொல்லை தருவது.
இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பல பிரத்யேக நோய்களுக்கும் காரணம் ஆகிறது. கேரட் போன்ற வேர் காய்கறிகளை சாப்பிடுவது, ஈஸ்ட்ரோஜன் நிலையை கட்டுக்குள் வைக்கிறது.
பிற ஹார்மோன்களின் அளவையும் பராமரிக்கிறது.
மாதவிடாய் வலி குறையும்
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படும். அவர்களுக்கு, கேரட் நல்லது.
மாதவிடாய் காலங்களில், கேரட்டை சாலட் வடிவில் சாப்பிடலாம் அல்லது வேகவைத்து உண்ணலாம். அல்லது கேரட் ஜூஸ் பருகுவது நல்லது.