இரு பெண்களை மோதிவிட்டு தப்பிச்சென்ற கார்
இங்குராகொடை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த விபத்தில் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரு பெண்களே படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இரு பெண்களும் அந்த நேரத்தில் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிசிடிவி (CCTV) காட்சிகளின் ஊடாக விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரைக் கண்டறிய இங்குராகொடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.