மகாவலி ஆற்றிற்குள் பாய்ந்த கார்: மூவருக்கு நேர்ந்த நிலை!
கண்டியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து கார் ஒன்று மகாவலி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (27) சனிக்கிழமை கண்டி - குருதெனிய வீதியின் இலுக்மோதர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து காரில் பயணித்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காணமால் போன நபரையும், காரையும் தேடும் நடவடிக்கையினை இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவும் இலங்கை கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.