சுவரை உடைத்து வங்கிக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு!
இன்று (22) காலை 8 மணியளவில் தனியார் வங்கி ஒன்றின் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கஹவத்தை நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சொகுசு கார் ஒன்றே குறித்த வங்கிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
வங்கி கடும் சேதம்
எனினும் இந்த விபத்தில் வங்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வங்கியின் படிக்கட்டுக்கள் ஊடாக முன்னோக்கி சென்று வங்கியினுள் புகுந்துள்ளது.
குறித்த காரை பல் மருத்துவர் ஒருவர் செலுத்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.