முல்லைத்தீவில் விதிமுறையினை மீறி தரித்து நின்ற காரால் நேர்ந்த விபரீதம்!
முல்லைத்தீவு முள்ளியவளை நகர் பகுதியில் வீதியின் விதிமுறையினை மீறி தரித்து நின்ற சொகுசு காரின் கதவினை திறக்க முற்பட்ட போது உந்துருளியில் பயணித்த இருவர் காரின் கதவில் மோதுண்டு மறு பக்கத்தில் பயணித்த நோயாளர் காவு வண்டியில் மோதுண்டதில் காயமடைந்துள்ளனர்.
இன்று (05) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் நோயாளர் காவு வண்டியின் சாரதி முள்ளியவளை வீதிப் போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றவாளியான அதிசொகுசு காரின் சாரதி தப்பிக்க முயற்சித்த வேளை நகரில் உள்ள சி.சி.ரிவி கமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.
சி.சி.ரி.வி காட்சிகளின் படி காரின் கதவினை திறக்கும் போது பின்னால் வந்த உந்துருளி கார் கதவில் மோதுண்டு எதிர் பக்கத்தில் இருந்து வந்த நோயாளர் காவு வண்டியில் மோதுவதை காணக்கூடியதாய் உள்ளது.