புற்றுநோயை எதிர்த்து போராடும் கண்டோலா ; இதில் இத்தனை நன்மைகளா?
பாகற்காய் கசக்கும் என்பது நம்மில் சிலர் அதை சாப்பிட மாட்டோம், ஆனால் அந்த பாகற்காயில் உள்ள சத்து உங்களுக்கு கிடைக்கவில்லை என கவலைப்படுகின்றீர்களா?
அதனை தீர்த்து வைப்பதற்காகவே இப்பொழுது பாகற்காய் இனத்தை சேர்ந்த பாகற்காயிலுள்ள ஊட்டச்சத்துக்களையும் கொண்ட கண்டோலா காய் பற்றியும் அதன் நன்மைகளையும் நாம் இங்கு பார்ப்போம்
இந்த கண்டோலா தமிழில் பழுவக்காய் என்றும் மெழுகு பாகல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் கசப்பு சுவை அறவே கிடையாது.
கண்டோலாவில் வைட்டமின்கள், மினரல்கள், கரையக்கூடிய நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் C போன்ற அநேக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட்களும் கலோரியும் உள்ளன.
ஆண்டு முழுவதும் கிடைக்காத இந்த பழுவகாய் தலை முதல் பாதம் வரையிலான பலன்களைக் கொண்டுள்ளது என்பதால் கிடைக்கும் போது மறக்காமல், மறுக்காமல் சாப்பிடுவது நல்லது.
எடை குறைக்க உதவும்
நீங்கள் எடையை குறைக்க பல வழிகளை பின்பற்றியும் எடை குறையவில்லையா கவலையே படாமல் இந்த பழுவக்காயை உங்கள் உணவில் சேர்ந்து கொள்ளும் போது உங்கள் உடலிலுள்ள கலோரி குறைந்து எடை குறைப்புக்கு உதவும்
வயிற்றுப்புண் குணமாகும்
உணவுக்குழாய், சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சி காரணமாக வயிற்றுப்புண் ஏற்படுகிறது. காரம் சேர்த்துக் கொள்ளாமல் பழுவக்காயை சமைத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும். அது மட்டுமில்லாமல் மூலநோய்களுக்கும் இது சிறந்த பலனளிக்கும்
சர்க்கரை நோயை குறைக்கும்
மூளை மற்றும் நரம்பியல் பாதுகாப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அதனால் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக இருக்கிறது.
சருமத்தை பளப்பளப்பாக்கும்
பழுவக்காயில் பீட்டா கரோட்டின், லுடீன், சாந்தைன்ஸ் ஆகியவை இருப்பதால் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. தோல் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த காய் பெரிதும் உதவுகிறது.
சிறுநீரங்களில் கல் உருவாகாமல் தடுக்கும்
சிறுநீரங்களில் கல் (கிட்னி ஸ்டோன்) உருவாகாமல் தடுக்கின்றன. தொடர்ந்து இந்த காயை உண்ணும் போது சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் இருக்கும் கல்லை நீக்க உதவுகிறது.