இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனேடிய நபர்
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சை (Mr. Marc-André Franche) , ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்ச் (Mr. Marc-André Franche) ஜூலை 8 அன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்ஸ் 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஃபிராஞ்ச் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிறந்த நிர்வாகம், உள்ளூர் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக லிபியாவில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதியாகச் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்ச் (Mr. Marc-André Franche) செயற்பட்டார்.