யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடந்த இரு நாள்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஸயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
