யாழில் மூன்றாம் பாலினத்தவர்களின் நடைபயண பேரணியில் பங்கேற்ற கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழில் மூன்றாம் பாலினத்தவர்களால் சமத்துவம், சமூக நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயண பேரணியில் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் பங்கேற்றுள்ளார்.
குறித்த நடைபயணமானது, இன்று (08.06.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்றாம் பாலினத்தவர்கள், சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியன தமக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமான இந்த நடைபயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நபண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலகம் முன்பாக நிறைவு பெற்றுள்ளது. மேலும், இந்த நடைபயணத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், குறித்த நிகழ்வில் அதிகமான மூன்றாம் பாலினத்தவர்களும் இணைந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என தெரிவித்து பொது மக்களுக்கு தெளிவூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.