நள்ளிரவில் உயிரிழந்த கனேடிய பிரபலம்; பலரும் இரங்கல்
பெரும் புகழ்பெற்ற கனேடிய நடிகை Martha Henry தனது 83வது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனில் கடந்த 1938ஆம் ஆண்டு பிறந்த Martha அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில் 1970ஆம் ஆண்டு கனடிய குடியுரிமை Marthaவுக்கு கிடைத்தது.
அதன் பின்னர் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய Martha சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பெரும் புகழ்பெற்றார்.
இந்த நிலையில் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட Martha அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி Martha உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஸ்டார்ட்போர்ட் நகரில் உள்ள வீட்டில் வியாழன் அன்று நள்ளிரவு Marthaவின் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் Marthaவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.