கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வேர்க்கடலை உண்ணலாமா!
பல நிறுவனங்கள் வேர்க்கடலை கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நம்ப வைத்து வருகின்றது.
ஆனால் உண்மையாகவே வேர்க்கடலை ஆரோக்கியமான ஒரு உணவுப்பொருள் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் எந்தவொரு பொருளையும் சாப்பிடுவதற்கு முன்னர் அவர்களது மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
பொதுவாக வேர்க்கடலை மலிவான பாதாம் என்று அழைக்கப்படுகிறது. பாதாமில் எவ்வளவு சத்து உள்ளதோ அதைவிட அதிகமான சத்துக்கள் வேர்க்கடலையில் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
சத்துக்கள்
வேர்க்கடலையில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என நினைப்பது தவறு. வேர்க்கடலை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காது உண்மையில் தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
வேர்க்கடலையில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் அது கொலஸ்ட்ராலுக்கு கெட்டது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அதுமட்டுமின்றி வேர்க்கடலை எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைவான உணர்வு ஏற்படுகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தடைபடுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஐந்து முறையாவது வேர்க்கடலை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இது சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைப்பது மட்டுமின்றி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் உடல் எடை குறைப்பதில் தொடங்கி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது வரை இது பல நன்மைகளை செய்கிறது.