தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடால் இவ்வளவு அற்புதங்களா?
உணவுக்கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் வெங்காயத்தில் இருக்கும் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா..? அதுவும் தினமும் பச்சையாக அப்படியே சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம். எப்படி என பார்க்கலாம்.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்
வெங்காயத்தில் பல்வேறு கந்தக கலவைகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. க்வெர்செடின், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்லிசின் போன்ற சேர்மங்கள் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இதய ஆரோக்கியம்
பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெங்காயத்தில் குர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் வெங்காயத்தின் வாசனை சற்று வலுவாக இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
நரம்பு சம்பந்தமான நோய் குறையும்
வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் நிறைந்துள்ளது. இந்த கூறுகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
வெங்காயம் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கல்
பச்சை வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனையை குறைக்கிறது.
வெங்காயம் எலும்புகளை பலப்படுத்துகிறது. கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
பச்சை வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. பச்சை வெங்காயம் தோல் சுருக்கங்கள், வயது புள்ளிகள், நிறமிகளை நீக்குகிறது.
ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உண்டு. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும்.