கற்பூரவல்லி (ஓமவல்லி) இலையின் அற்புத மருத்துவ குணங்கள் !
இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்று மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன.
கற்பூரவல்லி இலைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி உள்ளது. இந்த இலைகளை உட்கொண்டால் பல அற்புதமான பலன்களைப் பெறலாம்.
பலன்கள்
ஓமவல்லி இலைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலைகளை உட்கொள்வதால் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்றவை குணமாகும்.
அதன்படி செரிமான பிரச்சனைகள் இருந்தால், ஓமவல்லி இலைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். இந்த இலைகளின் சாறு செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
கற்பூரவல்லி இலைகள் நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை. அதன்படி கற்பூரவல்லி இலைகளை வேகவைத்து குடித்தால் இருமல், சளி போன்ற நோய்கள் சரியாகிடும். ஏனெனில் அவற்றில் தைமால் என்கிற மூலிகை உள்ளது இது தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
கற்பூரவல்லி இலையில் உள்ள பண்புகள் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். ஓமவல்லி இலைகள் வீக்கத்தை நீக்கும். இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் முழங்கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி பிரச்சனை நீங்கும். மேலும் ஓமவல்லி இலைகள் கீல்வாதத்திற்க்கு நன்மை பயக்கும்.
என்சிபிஐ இன் அறிக்கையின்படி கற்பூரவல்லி இலைகள் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த இலைகள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர்களின் பிரச்சனைகளை நீக்க உதவும் என்று கூறப்படுகின்றது.