இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகியான சமந்தா பவர் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுடன் அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள, மின்தடை, எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு முதலான பிரச்சினைகள் காரணமாக மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்க உடன், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகியான சமந்தா பவர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அப்போது, இந்த மாதம் அரசியல் பிரச்சினைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த இலங்கையர்களுக்கு
தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட சமந்தா, அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு, இலங்கை மக்களுக்கு தனது ஆதரவை
அளிக்கத் தயாராக இருப்பதாகவும், பிரச்சினைகளை தீர்க்க உதவியளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.