ஜனாதிபதியிடம் இருந்து வந்த அழைப்பு; அவசர அவசரமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ்
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொலைபேசியில் அழைப்பெடுத்த ஐனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள் என்ன? அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? என்ற விபரங்களுடன் தன்னை நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை 3 நாட்களுக்குள் யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் எதிர்வரும் ஞாயிற்று கிழமை கொழும்பு செல்லவுள்ள நிலையில் சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.