கப்ராலுக்கு தடை நீக்கம்!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்படவுள்ளது. அதன்படி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை இன்று (23) நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருத்தப்பட்ட முறைப்பாடு இன்னும் தயாராகாத நிலையில், அதனை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, திருத்தப்பட்ட முறைப்பாட்டை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணிகளும் கோரவில்லை
அத்துடன் அஜித் நிவார்ட் கப்ரால் மீதான பயணத்தடையை நீட்டிக்குமாறு முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகளும் கோரவில்லை என்பதனால் பயணத்தடை காலாவதியானது.
இந்த வழக்கை தாக்கல் செய்வது தொடர்பில் தமக்கு பல ஆட்சேபனைகள் இருப்பதாகவும், திருத்தப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டவுடன் அதனை தாம் முன்வைப்பதாகவும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.