மிலிந்த விவகாரத்தில் இந்தியா அதிரடி நிலைப்பாடு
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.
அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முதலாவது உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டார்.
அவர் தற்போது இந்தியாவில் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் இந்திய ஜனாதிபதியிடம் தனது நியமன நற்சான்று பத்திரத்தை இன்னும் கையளிக்கவில்லை.
குறித்த பத்திரத்தில் உள்ள அமைச்சரவை அந்தஸ்து எனும் ஏற்பாட்டை நீக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை இந்திய ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.