சுற்றுலா சென்ற இளைஞர்களால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சலசலப்பு
சுற்றுலா சென்ற இளைஞர்களால் இன்று ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞர்கள், திஸ்ஸமஹாராமயிலிருந்து மஸ்கெலியா பகுதிக்கு 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மஸ்கெலியா பகுதிக்குப் பயணித்தபோது எரிபொருள் தேவைக்காக ஹட்டனிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லையென பணியாளர்கள் தெரிவித்தபோது, தாம் வீடு செல்வதற்காகவேனும் 20 லீற்றர் டீசலையாவது தருமாறு பணியாளர்களிடம் கோரியுள்ளனர். இதனை பணியாளர்கள் நிராகரித்த போதே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தனையடுத்து சம்பவ இடத்துக்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து அதிகாரிகள் சென்று நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர்.
அத்துடன் பொகவந்தலாவை தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 20 லீற்றர் டீசலை இளைஞர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.