மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்
கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

விபரீத முடிவு
இந்த நிலையில் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்த போது நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, தொழிலதிபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.
அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.