ஒரு போத்தல் தண்ணீருக்காக 5 இலட்சம் ரூபாயை இழந்த வியாபாரி
நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் மதிப்புள்ள 1 லீற்றர் குடிநீர்ப் போத்தலை ரூ.140ற்கு விற்பனை செய்த நபருக்கு எதிராக ரூ5 இலட்சம் (500,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்
இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 2 வர்த்தகர்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் (100,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.