இலங்கை வந்த தொழிலதிபர் அதிரடி கைது
வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
இவர் இன்று காலை 10.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த "மென்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையைச் சேர்ந்த 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 சிகரெட் கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.