தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வழமை போன்று பேருந்துகள் இயங்கும்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வழமை போன்று பேருந்துகள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பின்துவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
எனினும் கொழும்பில் இருந்து செல்லும் பஸ்கள் பின்துவயில் வெளியேறி இமதுவயில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையிலிருந்து பயணிக்கும் பேருந்து இமதுவையில் வெளியேறி பின்னர் பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன.
எனவே அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் எதுவும் இரத்து செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.