விபத்தில் சிக்கிய விமானப்படையின் அதிகாரிகள்; பேருந்துடன் மோதிய டிஃபெண்டர்
ஹிங்குராக்கொட - மெதிரிகிரிய பிரதான வீதியில் தனியார் பேருந்தொன்றும் விமானப்படையின் டிஃபெண்டர் வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்தும் டிஃபெண்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விமானப்படை அதிகாரிகள் காயம்
இன்று (19) காலை 7.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து மெதிரிகிரியவின் வடிகவெவயிலிருந்து ஹிங்குராக்கொடை நோக்கிச் சென்றுள்ளது.
அதேவேளை டிஃபென்டர் வாகனம் ஹிங்குராக்கொடையிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்றுள்ளது.
விபத்தில் டிஃபென்டரில் பயணித்த மூன்று விமானப்படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.