பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி
மாவனல்லை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (லங்கம) சொந்தமான பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்து இன்று (03) காலை மாவனெல்லை எருவ்பொல வீதியின் எத்தமிட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞர் அரநாயக்க லீலாகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்
அசுபினி எல்ல நீர் திட்டத்தின் கீழ், எரவ்பொல வரை நீர் வழங்குவதற்காக அந்த வீதியில் வடிகாண்கள் வெட்டப்பட்ட நிலையில் இவ்வாறு வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற வடிகாண் காரணமாக வீதியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டமையும் விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.