பேருந்து - முச்சக்கர வண்டி மோதி விபத்து; இருவர் படுகாயம்
நாவலப்பிட்டி, அம்பகஸ்பிட்டிய பகுதியில் இ.போ.ச பஸ் - முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக சிகிச்சை
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை, மஹாவெலிகமவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற கொத்மலை டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து பஸ்ஸுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.