இலங்கையில் பேருந்து கோர விபத்து; ஐவர் பலி... 40 பேர் படுகாயம்
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது
40 க்கும் மேற்பட்டவர்கள் காயம்
இரணடாம் இணைப்பு
அநுராதபுரம், தலாவ பகுதியிலுள்ள ஜயகங்க சந்திக்கு அருகில், பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் பயணித்த பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் விபத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.