யாழில் காட்டுப் பகுதியில் கிடந்த பொதிகளால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணை
பருத்தித்துறை, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (18) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொடகவெல, பல்லேபெத்த பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[
நேற்று (18) மாலை கொடகவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேபெத்த பகுதியில் கொடகவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து, 09 கிலோகிராம் 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.